புதுச்சேரியில் பள்ளிவாசல் இமாம் மீதும், பள்ளிவாசல் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1755 Views
புதுச்சேரியில் பள்ளிவாசல் இமாம் மீதும், பள்ளிவாசல் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
Pondy
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நேற்று (ஆகஸ்ட் 14, 2016) புதுச்சேரியில் உருளையன்பேட்டை பேரூந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் இறுதியில் அதில் பங்குகொண்டவர்கள் அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாம் நூருல் அமீனை பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பள்ளிவாசல் மீதும் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் மிக மோசமாக காயமடைந்த இமாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி செயலாளர் பஷீர் அஹ்மது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள இந்து முன்னணியினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply