நெல்லையில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய காவல்துறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1789 Views
நெல்லையில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய காவல்துறை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
mhj redpix
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நெல்லை மாவட்டம், இராதாபுரம் வட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி மலை பகுதியில் உள்ள பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த புதிய தலைமுறை செய்தியாளர் வள்ளியூர் ராஜாகிருஷ்ணன், நெல்லை மாவட்டப் பொறுப்புச் செய்தியாளர் நாகராஜன் கந்தன் மற்றும் தினகரன் செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி சேகரித்து அனுப்பி அச்செய்தி ஊடகங்களிலும், நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
மகேந்திரகிரி மலைப் பகுதியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த பாறை பிளவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக உள்ளது. இந்த செய்தியின் உள்ள உண்மைகளை விசாரணை செய்து அதுதொடர்பாக அரசிற்கு அறிக்கை அளிக்க வேண்டிய காவல்துறை அதற்கு மாற்றமாக செய்திகளை சேகரித்து அனுப்பிய ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
பணகுடி காவல் அதிகாரிகளின் இச்செயலலை கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டியும் இன்று பாளைகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதற்குபிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தாக்கி அவர்களை வலுக்காட்டயாமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக போராட்டங்களின் ஈடுப்பட்ட ஜனநாயகத்தின் நான்காவது து£ண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கைகளின் ஊழியர்களை காவல் துறை தாக்கியிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
எனவே, நெல்லை மாவட்டத்தில் ஜனநாயக கடமையாற்றிவரும் பத்திரிக்கையாளர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகேந்திரகிரி மலை பாறை வெடிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply