திருப்பதி அருகே நடந்த விபத்தில் 20 பேர் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

1719 Views
திருப்பதி அருகே நடந்த விபத்தில் 20 பேர் மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
tirupati
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சித்தூர் பகுதியில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஏப்போடு பகுதியில் டீ கடையில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் மீதும், அதே இடத்தில் காய்கறி மற்றும் பழங்களை விற்றுக்கொண்டிருந்த ஏழை எளிய வியாபாரிகள் மீதும் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
விபத்தில் மரணமடைந்த 20 பேரின் குடும்பத்தினருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், மரணமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
 தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply