திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1020 Views
திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் கொலை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
farook
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி உமர் ஃபாரூக் நேற்றிரவு உக்கடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திகிறது.
கருத்து வேறுபாடுகளுக்கு கொலை தீர்வாக இருக்காது, பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒருமித்து செயல்படவேண்டிய இந்த தருணத்தில் பதட்டம் நிறைந்த கோவையில் இதுபோன்ற படுகொலை நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டிக்க வேண்டுமென கோருகிறேன்.
சகோதரர் ஃபாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map