திமுக தலைமையிலான கூட்டணியில் மமகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.

25-03-2016 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியார் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி, தமுமுக தலைவர் மவுலவி ஜே.எஸ்.ரிஃபாயி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மமக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தொகுதி உடன் பாட்டில் கையெழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 5 இடங்களில் போட்டியிடும் என்று தீர்மானித்து இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ளன.  இச் சந்திப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

DMK1DMK-MMK_AgrementDMK2
DMK3

Leave a Reply