திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமுமுக&மமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தமுமுக&மமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து

dsc02163

dsc02153

dsc02156

dsc02158

திமுகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மமக பொருளாளர் ஒ.யு. ரஹ்மத்துல்லா, தமுமுக பொருளாளர் பி.எம்.ஆர். சம்சுதீன், தமுமுக பொதுச் செயலாளர் (பொ) பி.எஸ்.ஹமீது மற்றும் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்கம், சமூக நீதியைத் தொடர்ந்து பாதுகாத்திடவும் சிறுபான்மையினர் நலன் காக்கும் இயக்கமாக திமுகவை தொடர்ந்து வளர்த்தெடுத்திடவும் செயல் தலைவர் அயராது பாடுபட வேண்டும் என்று தமுமுக &மமக தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதேபோல் தமிழக விவசாயிகளின் அதிர்ச்சி மரணங்கள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது திமுகவின் மகளிரணி செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கவிஞர் கனிமொழி எம்.பி. உடனிருந்தார்.

Leave a Reply