தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

625 Views

தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

tambaram 1

காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் 5.8.2016 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், அஸ்லம் பாஷா, எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

tambaram 2
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் “இன்னும் ஒரு மாதத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரவிருக்கிறது. அதில் முஸ்லிம்கள் பிராணிகளை அறுத்துப் பலியிடுவார்கள். இது, அரசியல் அமைப்புச் சட்டம் எங்களுக்கு வழங்கிய உரிமை. இந்த உரிமையில் குழப்பம் விளைவிப்பவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தடுக்க வேண்டி வரும்” அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply