தமிழக முதலமைச்சராகப் பொறுபேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிநேய மக்கள் கட்சி வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுபேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு
மனிநேய மக்கள் கட்சி வாழ்த்து!
eps
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
“ தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வறட்சி, காவிரிப் பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், மீனவர் வாழ்வாதாரம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் சவாலான சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தங்களது தலைமையிலான அரசு அமைந்திருக்கிறது. தங்கள் தலைமையிலான புதிய அரசு இச்சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையிலும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் தங்கள் அரசு செயல்படும் என்று நம்புகிறேன்.
சிறுபான்மையின மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும், தமிழக மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத வகையில் தங்களின் தலைமையிலான அரசு இருக்கும் என நம்புகின்றேன்.”
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply