தமிழகத்தின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

தமிழகத்தின் அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
Panwarilal-Purohit-appointed-as-new-Governor-of-Tamil-Nadu
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திற்கு கடந்த ஓராண்டாக முழுநேர ஆளுநரை நியமிக்காமல் பொறுப்பு ஆளுநரை வைத்து தமிழக அரசியல் நெருக்கடிக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அனைத்து விஷயங் களிலும் தமிழகத்தை பின்நோக்கி செல்லும் சூழலை மத்திய பாஜக அரசு உருவாக்கியது.
தற்போது தமிழகத்திற்கென்று ஒரு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். புதிய ஆளுநர் நியமனம் என்பது காலம் தாழ்ந்த முடிவு என்றாலும், ஒரு முழுநேர ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்பது தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது.
புதியதாக நியமிக்கப்பட்டிருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
புதிய தமிழக ஆளுநர்அவர்கள் தனது பொதுவாழ்வில், பார்வார்டு பிளாக், காங்கிரஸ், பாஜக, மீண்டும் காங்கிரஸ், மீண்டும் தற்போது பாஜக என தனது அரசியலை வாழ்வை தொடர்ந்துவருகிறார். ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் பன்வாரிலால் புரோஹித் இருந்துள்ளார். பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்ட அவர் தமிழ்நாட்டின் தற்போதைய அசாதாரண அரசியல் சூழல் குறித்து நடுநிலையான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்கட்சி தலைவர்கள் தமிழக ஆளுநரிடம் கொடுத்த கோரிக்கைகள் அனைத்தும் “செவிடன் காதில் ஊதிய சங்கை போல்” உள்ள நிலையில் புதிய ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு அரசியல் சாசனத்தின் விழுமியங்களின் அடிப்படையில் உரிய தீர்வுகளை காண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply