டாக்டர் சேப்பன் மறைவு! ஒரு சமூகப் போராளியை இழந்துள்ளோம்!! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!!

டாக்டர் சேப்பன் மறைவு!
ஒரு சமூகப் போராளியை இழந்துள்ளோம்!!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!!
Dr-sepan
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:
இன்று காலை இந்திய குடியரசுக் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சேப்பன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.
டாக்டர் சேப்பன் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருந்தபோதிலும் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தலித் மக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு சமூக மக்கள் மத்தியில் நல்லிணக்கம் வளர பாடுபட்டவர். என்னுடைய மாணவப் பருவகாலம் முதல் அவருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. சமூக உரிமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றி காலங்கள் நினைவு கூறக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
அதுமட்டுமன்றி முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் அவர் மிகவும் நெருக்கமான பற்றும் பாசமும் கொண்டிருந்தார். அதன்காரணமாக ‘விடுதலைப் பெற துடிப்பது ஏன்?’ உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்களைத் தொகுத்து ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
டாக்டர் சேப்பன் அவர்கள் தலித் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் நெருக்கமான உறவு ஏற்பட பாலமாக இருந்தார். அதுமட்டுமின்றி தீண்டாமையில் இருந்து விடுதலைப் பெற இஸ்லாமே தீர்வு என்று அவர் பல இடங்களில் எழுதியுள்ளார். எழுவதோடு மட்டுமின்றி பிரச்சாரமும் செய்து அதனால் பலர் இஸ்லாத்தை ஏற்க அவர் காரணமாக இருந்தார்.
மிகவும் குறைந்த கட்டணத்தில் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் மருத்துவ சேவையை அளித்து வந்ததை நான் நேரில் பார்த்துள்ளேன். அவரின் மரணம் எனக்கு மிகப்பெரிய துயரத்தை அளித்துள்ளது.
டாக்டா சேப்பன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply