ஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!!

ஜனநாயகத்தை காப்பதில் பத்திரிக்கையாளர்களின்
 பங்கு அளப்பரியது! தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்து செய்தி!!
Press Day
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையில் சேவைப் புரிந்துவரும்ப த்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தேசிய பத்திரிக்கையாளர் தின வாழ்த்துகளை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊடகங்களுக்கு வழங்கப்படும் கருத்துச் சுதந்திரமே ஒரு நாட்டின் ஜனநாயக அளவுகோளுக்கு சிறந்த அடையாளமாகும். அதேநேரத்தில் ஒவ்வொரு ஊடகவியலாளரும் தனது தோளில் சமூக பொறுப்புணர்வைச் சுமந்தவர்களாக இந்த நாட்டு மக்களின் கவசமாக செயல்பட வேண்டும்.
அதிகாரவர்க்கம் செய்யும் தவறுகளுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யும் உன்னத பொறுப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தான் இந்நாட்டின் காவாளிகளாக இருகின்றனர். அநீதி, அடக்குமுறை மற்றும் சமூகத்தின் பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராகச் செயல்பட உயிர்தியாகம் உட்பட பல்வேறு தியாகங்களை செய்து ஜனநாயகத்தை காப்பத்தில் ஊடகவியலாளர்கள் அளப்பரிய பங்கு வகிக்கின்றனர். பல்வேறு தியாகங்களை புரிந்து சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு இந்நாளில் எனது பாராட்டுகளையும் வார்த்தைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply