செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!

மாணவ பருவத்தில் திமுகவில் இணைந்து தனது சளைக்காத உழைப்பால் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலினுக்கு  மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!
stalin112_09086
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“இன்று (4.1.2017) திராவிட முன்னேற்றக் கழக பொதுக் குழுவில் தாங்கள்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவர் பருவத்தில் இணைந்து இடைவிடாமல் உழைத்து மிசா உட்பட பல சோதனைகளை எதிர்கொண்டு தாங்கள் ஆற்றிய சிறப்பான சளைக்காத பணியினால் இந்தப் பொறுப்பு தங்களை வந்தடைந்துள்ளது.
தங்களின் சீரிய தலைமையின் கீழ் சமூகநீதி, சமூகநல்லிணக்கம், சிறுபான்மையினர் நலன், தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவை மேலோங்க திராவிட முன்னேற்றக் கழகம் சிறப்பாக செயல்படும்  என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கழகத்தின் செயல் தலைவராக தாங்கள் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கின்றேன்.”
எம்-.ஹூசைன் கனி
தலைமை நிலையச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply