சென்னை ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

1329 Views

சென்னை ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்!
மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!!

Soorajjpg

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்ததைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக போராடிவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அதன் வளாகத்தின் மாட்டிறைச்சி உணவை உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.

அந்த போராட்டத்தில் பங்கெடுத்த சூரஜ் என்ற மாணவர் மீது இன்று பாசிச வெறியர்கள் ஐஐடி உணவகத்தில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மாணவர் சூரஜ் மீது நடத்தப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பசு பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற காட்டுமிராண்டித் தாக்குதல் தற்போது தமிழகத்திலும் தலையெடுத்துள்ளது. பாசிச வெறியர்களின் இதுபோன்ற காட்டுமிராண்டிச் செயலை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.

எனவே தமிழக அரசு மாட்டிறைச்சி விஷயத்தில் மௌனம் காப்பது போல் இந்த தாக்குதல் விஷயத்திலும் மௌனம் காக்காமல் வன்முறை, கொலைவெறித் தாக்குதலில் ஈடுப்பட்ட குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply