சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை…

* சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டும்

சலவைத் தொழில் செய்யும் வண்ணார் சாதியினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து……
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

MH Jawahirullah

MH Jawahirullah

சிறுபான்மை மொழிகளான உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலே படிக்கக்கூடிய மாணவர்க 10 ஆம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு தமிழிலே கட்டாயமாக எழுத வேண்டுமென்ற ஒரு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு இந்த அரசு கனிவோடு, சட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும்கூட, சிறுபான்மை மொழி மாணவர்களுடைய அந்த எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமல், இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சினை என்ற அடிப்படையிலே இதற்கு நீங்கள் ஒரு விதிவிலக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக, தமிழகத்தில் வாழும் சலவைத் தொழிலாளர்கள், வண்ணான் சாதியைச் சேர்ந்தவர்கள் 69 ஆண்டு காலமாக தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளார்கள். அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கை நீண்டகாலமாக இருக்கின்றது. அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

Leave a Reply