சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்! ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!

1767 Views
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்!
ஜனநாயகப் படுகொலை என மனிதநேய மக்கள் கட்சி கருத்து!!
stalin
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்
பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
இன்று(17.08.2016) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யதிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டமன்றப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் களையும், அதன் தலைவர்களையும் விமர்சிக்கும் போது அதனை அனுமதித்து அவைக்குறிப்பில் பதிவு செய்யும் சபாநாயகர், அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதிலளிக்கவோ, எதிர்க்கவோ செய்தால் அதனை அனுமதிக்கவும், அவை குறிப்பிலிருந்து நீக்கவும் செய்ய உத்திரவிட்டு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.
மேலும் திமுக சட்டமன்றக் கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி இருப்பதும், திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. இது சட்டமன்றப் பேரவையில் மாண்புபையும், கண்ணியத்தையும் சீரழிக்கும் செயலாகும்.
பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் 88 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்து, காவல்துறை உட்பட  முக்கிய மானியக்கோரிக்கையின் போது சட்டமன்ற நடவடிக்கைகளில் அவர்களை பங்கேற்க விடாமல் தடுத்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
எனவே, இந்த சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்து  திமுக உறுப்பினர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply