சட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

506 Views
சட்டசபை நிகழ்வுகளைக் கண்டித்து திமுக உண்ணாநிலை போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!
stalinassembly3
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.   ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழக சட்டசபையில் கடந்த 18.02.2017 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் போது நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்து திமுக சார்பில் நாளை (22.02.2017) தமிழகம் முழுவதும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நம்பிக்கைக் கோரும் தீர்மானம் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் நிறைவேற்றப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது.
பேரவைத் தலைவர் சபையை ஒத்திவைத்துவிட்டு சபையை விட்டு வெளியே சென்றபிறகு சபைக் காவலர்களால் திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் தாக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்படும் வரை சபையில் இருந்திருக்க வேண்டும்.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக விதிமீறல்களைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை நடைபெற உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. திமுக சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply