க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்!
மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
fidal-castro
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
க்யூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, உடல்நலக் குறைவால் தனது 90வது வயதில் மரணமடைந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ராணுவ சர்வாதிகாரி பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மக்களுக்கே அரசதிகாரம் என்பதை நிலைநாட்டிய புரட்சியாளர் காஸ்ட்ரோ.
அமெரிக்க எதேச்சதிகாரத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய காஸ்ட்ரோ கியூபாவில் புரட்சியின் போது சேகுவேராவுடன் இணைந்து போராடினார். அமெரிக்காவின் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்கொண்டு  பல்வேறு பொருளாதாரத் தடைகள், சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப் பாதையில் கியூபாவை அழைத்துச் சென்றவர் காஸ்ட்ரோ. இவரது முயற்சியால் உலகில் மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் மக்களுக்குக் கிடைக்கும் நாடுகளில் க்யூபா முதன்மையானது. குழந்தைகள் நலம், கல்வி ஆகியவற்றுக்கும் அதிக நிதி செலவு செய்து மனித வள குறியீட்டில் சிறப்பான நிலையை அந்நாடு பெற்றுள்ளது.
இந்தியாவின் உற்ற நண்பனாக விளங்கி அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை வலுப்படுத்தியவர் காஸ்ட்ரோ.
ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் தலைகுனியாமல் ஒரு நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லலாம் என்பதற்கு நமது காலத்தில் சிறந்த எடுத்துக் காட்டாக கியூபாவை உருவாக்கிய காஸ்ட்ரோவின் மரணம் உலகில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.
 அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply