கோவை சிறையில் வாழ்நாள் சிறைவாசி ரிஜ்வான் பாஷா அகால மரணம்: தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்!

1283 Views

கோவை சிறையில் வாழ்நாள் சிறைவாசி ரிஜ்வான் பாஷா அகால மரணம்:
தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்!

RISWAN

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இன்று காலை கோவை மத்திய சிறையில் ரிஜ்வான் பாஷா என்ற ஆயுள் சிறைவாசி மரணம். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது அறிவித்த பொது மன்னிப்பில் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏங்கியிருந்து அது ஏமாற்றமாக மாறியதால் மனவிரக்தி அடைந்து உடல்நலன் பாதிக்கப்பட்டு ரிஜ்வான் பாஷா மரணமடைந்தார்.

ரிஜ்வான் பாஷா 21 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். இவரது மரணத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

கோவை சிறையில் வாழ்நாள் தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகளில் சிறையிலேயே மரணிக்கும் நான்காவது சிறைவாசி ரிஜ்வான் பாஷா. இதற்கு முன் தஸ்தகீர், சபூர்ரஹ்மான் மற்றும் ஒசீர் ஆகியோர் மரணத்துள்ளார்கள்.

அடுத்த சிறைவாசி மரணிக்கும முன் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அரசியலமைப்புச் சட்டம் 161ம் பிரிவு தந்துள்ள தனித்த உரிமையை பயன்படுத்தி தமிழக அரசு 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அனைவரையும் உடனே விடுதலைச் செய்ய வேண்டும். சிறைச்சாலை சீர்திருத்த கூடமே தவிர மரணகூடம் அல்ல என்பதை தமிழக அரசு உணரவேண்டும். சிறையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், சிறைவாசிகளுக்கு தரமான சிகிச்சை மறுக்கப்படுவதும் இத்தகைய அகால மரணத்திற்கு ஒரு வகையில் காரணமாக அமைந்துள்ளன.

மரணமடைந்த ரிஜ்வான் பாஷா குடும்பத்தினருக்கு ரூ25 லட்சம் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

இவண்

எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply