கோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

997 Views
கோடை வெயிலின் தாக்கம்:
பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு! 
மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ற்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த கோரிக்கைகளைச் செவிமடுத்த திரு. நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் ஜூன் 10ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

மாணவ, மாணவிகள் மீது உள்ள அக்கறையின் காரணமாகவும், அவர்களின் நலனைக் கருதியும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமியை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழகத்திலும் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை ஜூன் 10 வரை நீட்டித்து உத்தரவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map