கோவையில் உடனடியாக ஆர்.ஏ.எப். மின்னல் அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1460 Views
கோவையில் உடனடியாக ஆர்.ஏ.எப். மின்னல் அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்!  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
coimbatore
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று கோவையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இந்து முன்னணி குண்டர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. திருப்பூரில் இது குறிப்பிட்ட அளவு பிரதிபலித்துள்ளது.
சசிகுமார் என்ற இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார். அநியாயமாக யார் கொல்லப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டிய செயல் தான். ஆனால் இந்தக் கொலை தொடர்பாகப் பூர்வாங்க விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்தக் கொலையை சாக்காக வைத்துக் கொண்டு முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு கோவை மாநகர் முழுவதும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதிகள் வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் இதுபோன்ற கொலைகள் நடைபெறும் போது கொலையுண்டவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது கலவரங்கள் வெடித்துள்ளன. இதிலிருந்து படிப்பினைப் பெற்று காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சமீப காலத்தில் கூட இளவரசனின் உடல் அடக்க ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்க வில்லை. இது போல் பல தருணங்களில் காவல்துறை கெடுபிடியாக நடந்துள்ளது. ஆனால் இன்று காலையிலிருந்தே கோவையில் பதட்டம் ஏற்பட்ட நிலையில் 10 கி.மீ. அளவிற்கு காவல்துறை இறுதி ஊர்வலத்திற்கு ஏன் அனுமதி அளித்தது?
இன்று கோவையில் ஆங்காங்கே இந்து முன்னணி குண்டர்கள் வன்முறையில் இறங்கினர். கோவை மாநகரக் காவல் ஆணையாளரே நேரில் களத்தில் இறங்கி வன்முறையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த நடவடிக்கைகளையும் மீறி கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இதற்குக் காரணம் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாதது தான்.
1997 நவம்பர் டிசம்பரில் கோவையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்ற போது அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரால் இயலாத சூழல் ஏற்பட்டது என்பதை நான் நேரில் பார்த்தவன். இதன் காரணமாக தான் Rapid Action Force  R.A.F (மின்னல் அதிரடி படை) என்ற மத்திய ரிஸர்வ் காவல் படையின் பிரிவின் இயங்குதளம் கோவையிலேயே அமைக்கப்பட்டது. 40 நிமிடங்களுக்குள் இந்த படைப்பிரிவு எந்தவொரு கலவரத்தையும் அடக்கிவிடும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இன்று கோவையில் பதட்டம் மிகுந்திருக்கும் சூழலில் தமிழக அரசு கோவையில் ஆர்.ஏ.எப். படையை வைத்து ஒரு கொடி அணிவகுப்பு கூட நடத்தாதது கலவரக்காரர்களுக்கு ஊக்கம் அளித்த செயலாகவே கருத வேண்டியுள்ளது. தமிழகக் காவல்துறை இதனை ஒரு கவுரவ பிரச்சனையாக கருதாமல் உடனடியாக ஆர்ஏஎப் படையை கோவை மற்றும் திருப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், தொழில் நிறுவனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
‘தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம்’ உள்ளிட்ட கலவரத்தைத் தூண்டும் பேச்சுக்கள் பேட்டிகளை அளித்தோரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பல வழிகளிலும் தோல்வி கண்;டு விரக்தியின் உச்சிக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டு தமிழகத்தில் சமூக அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவாரின் சதிகளை உணர்ந்து சமூக அமைதி காண விழையும் சமுதாயமே முஸ்லிம் சமுதாயம் என்பதை நிலைநாட்டுவோம்.
 இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map