குலுங்கியது திருப்பூர்! கொங்கு மண்டலத்தில் அரசியல் எழுச்சி!

607 Views

திருப்பூரில் திரள்வோம், திருப்பு முனையை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அளவிலான திருப்பூர் மாநாடு கொங்கு பகுதியில் புதிய அரசியல் எழுச்சியை உருவாக்கி விட்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் திருப்பூரையே அமளி துமளி படுத்திக்கொண்டிருந்தது.

இதற்கு போட்டியாக இந்து முன்னணியும் போட்டி மாநாட்டுக்கான விளம் பரங்களை செய்து கொண்டிருந்தது. அதுவே மனிதநேய மக்கள் கட்சியினரை சூடுபடுத்தி, பணிகளில் தீவிரப்படுத்த தூண்டியது எனலாம்.

இடையில் தாய்க்கழகத்தின் மாவட்ட தலைவர் யூசுப் அவர்களை காவல்துறை தாக்கிய சம்பவம், பணிகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இயல்பாக வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்களை அந் நிகழ்ச்சி போர்க்குணத்தோடு பணியாற்ற வைத்தது. அந்த உழைப்பு பிப்ரவரி லி 7, அன்று தெரிந்தது.

கண்ணீர் விட்ட கார்கில் தியாகி குடும்பம்

மாநாட்டின் வளாகத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் பெயரும், நுழைவாயிலுக்கு மாவீரன் திப்புசுல்தான், தீரன் சின்னமலை ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் நினைவுபடுத்தப்பட்டனர்.

மேலும் இரண்டு வரவேற்பு வளைவு களுக்கு எம்.ஜி.குலாம் காதர் சாஹிப், எம்.ஜி.சத்தார் சாஹிப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டன.

இவர்கள்தான் திருப்பூரில் இன்று கொடிகட்டிப் பறக்கும் பனியன் தொழி லின் முன்னோடிகள் ஆவர். இவர்கள் இன்று மறக்கடிப்பட்ட நிலையில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களை கண்ணியப்படுத்தி திருப்பூர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அதுபோல் இன்னொரு வளைவுக்கு கார்கில் போரில் பாகிஸ்தான் படைக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்த இந்திய ராணுவ வீரர் குன்னூர் செய்யது சத்தார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

அந்த போரில் 10 தமிழக வீரர்கள் உயிர் துறந்தனர். அவர்களில் இருவர் முஸ்லிம்கள் அவர்களில் ஒருவர்தான் குன்னூர் செய்யது சத்தார். அவர்கள் பெயர் மாநாட்டில் நினைவு கூறப்படுவதை நீலகிரி மாவட்ட ம.ம.க. செயலாளர் ஷேக், அவரது தந்தையிடம் கூறியபோது அந்த குடும்பமே அழுதி ருக்கிறது.

அவரது தந்தை பேசும் போது, நாங்கள் பல வருடங்கள் முஸ்லிம் லீக்கில் இருந்தவர்கள். எங்களை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் கண்ணியப்படுத்தி இருக்கிறீர்கள் என்று நெகிழ்ந்திருக்கிறார்.

தியாகிகளும்,சாதனையாளர்களும், சேவகர்களும்         மறக்கப்படக் கூடாது. அந்த புதைக்கப்பட்ட உண்மையாளர் களை மமக தொடர்ந்து மக்களிடம் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்

மாநாட்டில் பங்கேற்றவர்கள்

மாநாட்டில் பேரா.ஜவாஹிருல்லாஹ் (ஒருங்கிணைப்பாளர்) பி.அப்துல் ஸமது (பொதுச்செயலாளர்), எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் (பொருளாளர்) எம்.தமிமுன் அன் சாரி (துணைப் பொதுச்செயலாளர்). ஜே.எஸ்.ரிபாயி (உயர்நிலைக்குழு உறுப் பினர்), மதுரை கௌஸ் (அமைப்புச் செயலாளர்), நாசர் உமரி (அமைப்புச் செய லாளர்), பேரா. ஜெ.ஹாஜாகனி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவை சாதிக், கோவை செய்யத், தர்மபுரி சாதிக், கோவை அக்பர், (கொள்கை விளக்கப் பேச்சாளர்) வழக்கறிஞர் ஜெய்னுலாபுதீன் (மாநில செயற்குழு உறுப்பினர்) ஆகியோர் உரையாற்றினார்கள்.

மாநாடு முடிந்ததும் மாவட்ட நிர்வாகி கள் கடன்  சுமையால் தவித்தபோது அவர்களை விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லாமல் பொருளாளர் ஹாரூன், துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,   உயர்நிலைக்குழு  உறுப்பி னர் ஜெ.எஸ். ரிபாயி ஆகியோர் தங்கள் பயணத்தை     ரத்து செய்து விட்டு அவர்களோடு திருப்பூரிலேயே தங்கி விட்டனர். பலரிடம் போன் போட்டு உங்களால் நன்கொடை தரமுடியுமா? என போனிலேயே ஒரு நாளை கழித்த னர். ஒரு வழியாக சிரமங்கள் ஓரளவு சரிசெய்த பிறகுதான் அவர்கள் திருப் பூரிலிருந்து புறப்பட்டனர்.

சங்கமம்?

திருப்பூரில் மாநாடு நடந்த அன்று கனிமொழி ஆதரவோடு சென்னை சங்கமம் போல், திருப்பூர் கூடல்லி2010 என்ற நிகழ்ச்சி 3 நாட்களாக நடந்தது. சினிமா நடிகர்லிநடிகைகள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சி அன்றுதான் நடந்தது. எனினும் அதைவிட கூட்டம் மமக மாவட்ட மாநாட்டிற்கு வந்ததுதான் உளவுத்துறையினரையே அசர வைத்து விட்டது.

இவர்களா? இவர்களால் இப்படி யெல்லாம் அரசியல் செய்யமுடியுமா? என வியக்குமளவுக்கு விளம்பரங்களும், கொடிகளும் பரபரப்பூட்டிக் கொண் டிருந்தன. அன்றைய தினம் திருப்பூரில் வழக்கமான வணிகமும், பணிகளும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயமாகும்.

மாலை 5 மணிக்கு திருப்பூரின் நுழை வாயில் சாலைகள் எல்லாம் நெரிசலில் திணர மலரட்டும்…..மலரட்டும்….. மனித நேயம் மலரட்டும்….. வெல்லட்டும்…..வெல்லட்டும்… சமூக நீதி வெல்லட்டும் என்ற முழக்கங்கள் அதிரவேட்டுகளாய் திசையெட்டும் பரவ திருப்பூரே குலுங்கத் தொடங்கியது.

அதிரடியாய் களத்தில் இறங்கிய காவல்துறை, போக்குவரத்தை சரிசெய்ய படாதபட்டு பட்டுக்கொண்டிருந்தது.

மாலை 6 மணிக்கெல்லாம் மாநாடு நடைபெற்ற சாலையில் கருப்புலிவெள்ளை கொடிகளுடன் வாகனங்கள் வர தொடங்க தொண்டர்கள் முகத்தில் பற்றி யது ஆரவாரம்!

வாக்கிலிடாக்கிகளுடன் பணியில் இருந்த இளைஞர் அணியினர் காவல் துறையுடன் இணைந்து வாகனங் களையும், மக்களையும் ஒழுங்குபடுத்தி மாநாட்டுத் திடலை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாநகர மக்கள் பொடி நடையாக குழந்தை குட்டிகளுடன் குடும்பம், குடும்பமாக நடந்து வர போக்குவரத்து முற்றிலும் நிலைகுலைந்தது.

மாவட்ட எஸ்.பி அருண் அவர்களின் தலைமையில்  உயர் அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே யிருக்க நிலைமையை சீராக்கிக் கொண் டிருந்தனர்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகே நிகழ்ச்சியை ஆரம்பிப்பது என முடிவானதால், திடலுக்குள் நுழைந்த கூட்டம் கடைகளை சுற்றிக்கொண்டே வந்தது. பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த திடலின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கடைகள், சி.டி கடைகள், உணவகங்களில் மக்கள் கூட்டம் முற்றுகையிட எதிர் பாராத வகையில் பெண்கள் பகுதி நிரம்பி வழிந்தது. அவர்களுக்கென தனி வசதிகள் அந்தப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் சிரம மின்றி உட்கார்ந்திருந்தனர்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு மாவட்ட செயலாளர் ஹாலிதீன் அவர்கள் தலைமையில் கோவை ஜாஹிர் அவர் களின் நீதிபோதனையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.

தலைமை நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் மேடையில் அமர்ந்து மக்கள் வெள்ளத்தை கவனிக்கத் தொடங் கினர். 8 மணியளவில் நுழைவாயிலை தாண்ட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்  நிரம்பி  வழிய  மீண்டும் வாக னங்களில் கொண்டு எந்த நாற்காலிகளை எங்கே போடுவது என்று தெரியாமல் இளைஞர் அணியினர் மிகவும் தடு மாறினர்.

இந்த காட்சிகளை பாய்ந்து படம் பிடிக்கும் கருவிகளுடன் கூடிய கேமராக்கள் நாலாபுறமும் சுழன்று ஒளிபரப்ப இணையதளத்தின் வாயிலாக உலகமெங்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த தமிழகலிபுதுச்சேரி மாநில மக்கள் பூரிப்படைந்தனர். உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். மூலமாக தங்கள் மகிழ்ச் சியை மாநாட்டு பொறுப்பாளாரான துணைப்பொதுச்செயலாளர் தமிமுன் அன் சாரிக்கு தெரிவித்துக் கொண்டேயிருந்தனர்.

இறுதியாக பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் உரையாற்றும் போது மணி 11 ஐ தாண்டியிருந்தது.

அவரின் உரைக்குப் பிறகு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் யூசுப் அவர் களின் நன்றியுரையுடன் மாநாடு நிறைவுக்கு வந்தது. புதிய நம்பிக்கையோடு, கொங்கு  மண்டலத்தில்                  நாங்கள் அசைக்க முடியாத வாக்கு வங்கி என்பதை நிரூபித்த திருப்தியோடு மக்கள் கூட்டம் திரும்பத் தொடங்கியது. ஆம் இவர்கள் கூடியது கலைவதற்காக அல்ல! மீண்டும் அணிதிரள்வதற்காக!

மாநாட்டில் சமூக நல்லிணக்கம்

திருப்பூர் மாநாட்டில் மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவெனில் அங்கு கூடிய பல இன மக்களின் சங்கமம்தான். பொதுவாக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகள் கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தான் தீவிரமான செயல்பாடுகளுடன் இருக் கின்றார்கள்.

அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் ஜனரஞ்சகமாக உள்ளனர். அப்படிப்பட்ட பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் இந்துக்கள், முஸ்லிம்கள், தலித்கள் என சகலரும் ஒரே குடும்பம் போல கலந்து கொண்டது மகிழ்ச்சியைத் தந்தது.

அதுவும் கவுண்டர் சமுதாய மக்களின் முக்கிய சக்தியாக திகழும். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் மாநில அமைப்பாளர் தனியரசு அவர்களும், வலுவான அரசியல் கட்சியாக திகழும் கொங்கு முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்களும் மாநாட்டுக்கு தங்களது வாழ்த்துக்களை அலைபேசி மூலம் தெரிவித்தனர்.

கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலை அவர்களின் பெயரால் வரவேற்பு வளைவு வைத்ததையும், தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பெயரை மாநாட்டு வளாகத்திற்கு சூட்டியதையும் தனியரசு   அவர்கள் பாராட்டிப் பேசி னார். மேலும் துணைப் பொதுச் செய லாளர் தமிமுன் அன்சாரியிடம் எங்கு மதக் கலவரங்கள் நடந்தாலும் நம் இரு அமைப்புகளும் போய் சமாதானப் படுத்துவோம் என்றவர், அடுத்து வரும் தங்கள் கட்சியின் நிகழ்ச்சிகளில் கோவை சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.

கவுண்டர் சமுதாயத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் கட்சியின் சார்பில் மாநில பிரச்சாரக்குழு செயலாளர் பி.தங்கவேல் அவர்களை மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

தங்கவேல் அவர்கள் மாநாட்டை வாழ்த்தி பேசும் போது கரகோஷம் விண் ணைப் பிளந்தது. அதாவது, சமூக நல்லிணக்கத்திற்கு நாங்களும் தயார் என்பது போல் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்தது. மாநாட்டிற்கு முதல் நாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் அவர்கள் மாநாட்டு திடலுக்கு வந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

அவரும் விடுதலைப் போராட்ட தியாகிகள் திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், கார்கில் போர் தியாகி குன்னூர் சையத் ஆகியோரின் பெயர்களை மாநாட்டின் பல்வேறு தளங்களுக்கு சூட்டியிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அறிவுப்பூர்வமாக, நிதானமாக பொது அரசியலையும், சமுதாய அரசியலையும் சரிவிகிதத்தில் செல்படுத்தும் போது அத னால் விளையும் நன்மைகள் ஏராளம். இதை உணர்ச்சிகரமாகவும், குறுகிய பார்வையுடனும் அணுகுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஒரு முஸ்லிம் பத்திரிக்கையாளர் நம்மிடம் கூறினார்.

Leave a Reply