குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் அறிவிப்பு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் அறிவிப்பு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!
meira_kumar_070414
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவையின் முன்னாள் தலைவர் மீரா குமார் அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன்.
மறைந்த விடுதலைப் போராட்டத் வீரரும் முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் மகளான திருமதி. மீரா குமார், தலித் சமூகத்தை சேர்ந்தவரும் மக்களவையின் முதல் பெண் சபாநாயகரும் ஆவார்.
கடந்த 1973ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் இந்தியாவிற்கான தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய திருமதி மீரா குமார், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004-2009ஆம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராகவும் அப்பழுக்கில்லாமல் சிறப்பாகப் பணியாற்றியவர். கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவையின் முதல் பெண் சபாநாயகராகப் பதவியேற்று பொறுப்புணர்வோடு பணியாற்றி நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள சூழலில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் தேர்வு செய்யப்பட்டிருப்பதை மிகச்சரியான தேர்வாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. எனவே, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உட்பட மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மீரா குமாருக்கு மகத்தான வெற்றியைத் தரவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply