காவேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மமக ஆதரவளித்து பங்கேற்கும்!

காவேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக் கோரி விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மமக ஆதரவளித்து பங்கேற்கும்!
train-new-21-600-19-1482086496
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவேரி பாசனப் பகுதிகளில் தொடர்ந்து சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியாலும், இயற்கை சீற்றங்களாலும் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விவசாயிகள் பயிரிட்ட சம்பா விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு முறை நீரைப் பாய்ச்சினால் சம்பாவை முழுவதும் அறுவடை செய்யலாம். ஆனால் காவிரியிலிருந்து நீர் திறந்து விடாததால் சம்பா பயிர் கருகும் நிலை ஏற்படும்.
கர்நாடக மாநிலத்திலிருந்து சம்பா சாகுபடிக்காக நீரைப் பெற்றுத்தரக் கோரி மத்திய  அரசை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் 28.01.2018 அன்று நடைபெற இருக்கும் ரயில் மறியல் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கும்.
காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர் அவரவர் பகுதியில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்குகொள்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply