காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! மமக வரவேற்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு:
 மமக வரவேற்பு!
cauvery-water315
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் காவேரி மேலான்மை ஆணையம் அமைக்கப்படாததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை இவ்விசாரணையின் போது வெளிப்படுத்தி யுள்ளார்கள்.
இந்த சிறப்புமிக்க உத்தரவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
ஏற்கெனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும்  தமிழர்களுக்கு எதிரான போராட்டங்களும், தாக்குதல்களும் நடைபெற்றன.
தற்போது உச்சநீதிமன்றம் காவேரி மேலான்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கர்நாடகவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்க மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக
Leave a Reply