காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

561 Views
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்:
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
marina
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு முடிந்த பின்னரும் அலட்சியமாகச் செயல்படுவதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் சென்னை, மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடி போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குச் பச்சையாகத் துரோகம் இழைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply