காவல்துறையினர் தங்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

காவல்துறையினர் தங்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
police
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததன் காரணமாக ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை பணியாற்றுகின்ற சூழல் நிலவுகிறது. இந்தப் பணிச்சுமையால் மிகுந்த மன அழுத்தமும், ஓய்வும் இல்லாமல் இருப்பதன் காரணமாக காவல்துறையில்  தற்கொலை முயற்சி, மாரடைப்பால் ஓய்வுக்கு முன்னரே மரணமடைதல், நோய்வாய்படுதல் போன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உயரதிகாரிகள் தங்களுக்குள் கூடி தங்களது மனக்குறைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளுதல், தேவைகளை தலைமைச் செயலாளர் மட்டத்தில் விவாதித்தல் போன்ற வாய்ப்புகள் அனைத்தும் கட்டுப்பாடு என்ற பெயரில் கீழ்நிலை அதிகாரிகள் காவலர் களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த மனநிலையில் பணிபுரியும் காவலர்களும் கீழ்நிலை அதிகாரிகளும் தங்களது மனஅழுத்தத்தினால் ஏற்படும் கோபத்தை பலவழிகளில் பொதுமக்களிடமும் புகார்களை அளிக்கவரும் அப்பாவிகளிடமும் வெளிப்படுத்துகின்றனர்.
பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளுக்காக பல இடங்களுக்கு அனுப்பப்படும் போது அவர்களின் இயற்கைத் தேவைகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இதனாலும் அவர்களின் பணித்திறனில் குறைகள் உருவாகிறது. மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ‘பத்து பெண்கள் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியிடப் பாதுகாப்பு குறைதீர் மையங்கள் அமைத்திட வேண்டும்’ எனும் வழிகாட்டுதலை தமிழக பெண்காவலர்களுக்கு குறைந்தபட்சம் மாவட்ட அளவிலாவது குறைதீர் மையங்கள் அமைப்பதன் மூலம் காவலர்களின் பணித்திறனை மேம்படுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply