2069 Views
காடுவெட்டி குரு மரணம்:
மனிதநேய மக்கள் இரங்கல்!
மனிதநேய மக்கள் இரங்கல்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும்
இரங்கல் அறிக்கை:
இரங்கல் அறிக்கை:
வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
காடுவெட்டி குருவுடன் நமக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தில் கடுமையாகப் போராடியவர்.
காடுவெட்டி குரு கடந்த சட்டமன்றப் பேரவையில் எனது இருக்கைக்கு அருகில் இருந்தார். அவர் இனியமையாக பழகக்கூடியவராகவும் இருந்தார்.
காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி