கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகையை முன்னிட்டு தமுமுக மாவட்டப் பொறுப்பாளர் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகையை முன்னிட்டு தமுமுக மாவட்டப் பொறுப்பாளர் கைது!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

mhj new

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி தமுமுக மாவட்டப் பொறுப்பாளர் ஜிஸ்தி முகம்மது அவர்களை கன்னியாகுமரி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவருடன் வேறு பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவே கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

கைது செய்யப்பட்ட ஜிஸ்தி முகம்மது உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களை காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply