கந்துவட்டி கொடுமையினால் பறிபோன உயிர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

கந்துவட்டி கொடுமையினால் பறிபோன உயிர்கள்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

nellai

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று கந்துவட்டி கொடுமையால் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்து குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், மாவட்ட ஆட்சி தலைவர், காவல் துறை கண்காணிப்பாளர், அச்சன்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஐ.உஸ்மான் கான் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அப்துல் கனி, கம்பு கடை சுல்தான், பேட்டை சேக், அல்தாபி, கவுஸ், ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் மைதீன் சேட்கான் கண்டன உரை ஆற்றினார்.

Leave a Reply