எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு!

329 Views

மனிதநேய மக்கள் கட்சி மீது களங்கம் கற்பித்த எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு!

MMK-Kodi

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்,

“தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தமிழக மக்களுக்கு தொடர்ந்து நற்பணி ஆற்றி நற்பெயர் பெற்றுள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் நாங்கள் குறிப்பிடத்தக்க அளவு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மனிதநேயப் பணிகள் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் மக்களின் மதஉணர்வைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்குடன், இந்து மதத் தலைவர்கள் கொலை செய்யப்படுவதற்கு எங்கள் கட்சிதான் காரணம் என்று சித்தரிக்கும் விதமாகப் பேசியுள்ளார் எச்.ராஜா. மதவெறி சக்தி, பயங்கர வாதிகள் என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி எங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே மக்களின் மத உணர்வைத் தூண்டி கலவரம் விளைவிக்கும் உள்நோக்கத் துடனும், எங்கள் அமைப்பு மற்றும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் செய்தி ஊடகத்தில் பேசிய திரு. எச்.ராஜா அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.”

அன்புடன்
எம். ஹுசைன் கனி
தலைமை நிலைய செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Reply

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map