ஆயப்பாக்கம் டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை

ஆயப்பாக்கம் டாஸ்மாக் மதுக்கடை முற்றுகை

pas

காஞ்சி மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்து கடந்த 3ந்தேதி  ஊர்மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் 5ந்தேதி காவல்துறையினரின் பாதுகாப்போடு திறக்க முயற்சித்தனர்.
இதனையடுத்து ஊர் பிரமுகர்களிடமிருந்து ம.ம.க.பொதுசெயலாளர்
ப.அப்துல்சமதுக்கு அழைப்பு வந்தது. தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினர் களத்துக்கு சென்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெண்கள், திமுக, விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஊர்மக்களோடு இணைந்து டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்தனர். பெண்கள் மதுக்கடைக்கு மேல்பூட்டு போட்டனர்.
அன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தினம் என்பதால் போராட்ட களத்திலேயே மதுத்தீமைக்கு எதிரான (குத்பா) உரையுடன் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது தொழுகை நடத்தினார். மாலை வரை போராட்டம் நீடித்தது   பின்னர் அங்கு வந்த செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர்  ஓம்பிரகாஷ், திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் இனி இந்த மதுகடை திறக்கப்படாது, நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதியான உத்தரவாதம் அளித்தவுடன் போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
Leave a Reply