அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
Tamil_News_large_1690495_318_219
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு களில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடைபெற்ற பேரணி மற்றும் போராட்டத்தை கடுமையாக எதிர்த்த காவல்துறையினர் அப்போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களின் மீது தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த திரைப்பட இயக்குநர் திரு. கவுதமன் உள்ளிட்டோர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் அடையாளப்பூர்வமாகப் போராடியவர்களை தமிழக காவல்துறை தாக்கியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இது ஜனநாயக விரோத செயலாகும்.
தமிழர் பாரம்பரியத்தின் ஒரு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டை பீட்டா அமைப்பின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசும் இந்தத் தடையை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. சில மத்திய அமைச்சர்களின் நிலைப்பாடு பீட்டாவிற்கு ஆதரவாக அமைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் மத்திய பா.ஜ.கவைக் கண்டித்தும் தமிழர் திருநாளான பொங்கலன்று தடையை மீறி அடையாளப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்த முனைந்தவர்கள் மீது காவல்துறை இன்று நடத்திய கண்மூடித்தமான தாக்குதல் வேட்கக்கேடானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே, தமிழக காவல்துறை, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply