அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

1168 Views
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
jacto-geo-announce-will
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை :
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைக் கருத்தில் கொண்டும், அவர்களின் தொடர் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு நடவடிக்கை வேண்டுமே தவிர அதற்கு மாற்றாக அவர்களைக் கைது செய்வது அரசு ஊழியர்களின் உரிமைகளை நசுக்கும் செயலாகும்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply