அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்த உறுதி மேற்கொள்ள வேண்டும்

1197 Views
அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்த உறுதி மேற்கொள்ள வேண்டும்!
mhj-1
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்    எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின  வாழ்த்து செய்தி :
இந்திய திருநாட்டின் குடியரசு தினநாள், குடிமக்களின் அரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய நாள் குடியரசு தின நாள். இந்நாளில் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும் அதன் ஆன்மாவாய்த் திகழும் சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சார்பின்மை ஆகிய கொள்கைகளையும் மறைமுகமாய்ச் சிதைத்து வரும் சங்பரிவாரத்தின் அரசியல் கிளையான பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் மாபெரும் அபாயங்களைச் சந்தித்து வருகிறது. ஆதிக்கசாதியினரின் நம்பிக்கைக்காகப் பெரும்பான்மையான மக்களின் உணவு உரிமை, பண்பாட்டு உரிமை, வழிபாட்டு உரிமைகள் மோடி ஆட்சியில் மோசமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசுகளின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் மக்களைப் பிளவுபடுத்தி அதன்மூலம் தங்களது பாசிசக் கோட்பாடுகளை செயல்படுத்தி வெறியுணர்வை பரப்பிடும் பிளவு சக்திகளான மத வாத சக்திகளை முறியடித்து, ஜனநாயகத் தத்துவங்களை உறுதிப்படுத்தவும், நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியைக் சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் அனைவரும் ஓரே அணியில் திரளவேண்டும்.
குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
Leave a Reply